புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தியது ஜெய்ப்பூர்

  டேவிட்   | Last Modified : 07 Nov, 2018 08:05 am
pro-kabaddi-league-jaipur-beat-haryana

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில், நேற்று நடந்த ஆட்டத்தில் அரியானா அணியை வீழ்த்திய ஜெய்ப்பூர் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது.

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேற நகரங்களில் நடைபெற்று  வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் நேற்ற நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.

முதல் பாதியில் அரியானா அணி 20 - 18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜெய்ப்பூர் அணி சிறப்பாக ஆடியது.
 
இறுதியில், அரியானா அணியை 38 - 32 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது. இது ஜெய்ப்பூர் அணிக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close