• வியட்நாம், ஆஸ்திரேலியாவுக்கு குடியரசுத் தலைவர் அரசுமுறைப் பயணம்
  • ஜனவரி பேரணி ஓர் திருப்புமுனை: மம்தா பானர்ஜி
  • தேனி, திருவாரூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
  • இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே
  • அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள்

புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தியது டெல்லி

  டேவிட்   | Last Modified : 09 Nov, 2018 08:00 am

pro-kabaddi-league-delhi-beat-haryana

புரோ கபடி லீக் போட்டியின் 52-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 39-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. 

12 அணிகளுக்கு இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நொய்டாவில் நேற்றிரவு நடந்த 52-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 39-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. 11-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணிக்கு இது 8-வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.  

மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 37-27 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச யோத்தாவை வீழ்த்தி 6-வது வெற்றியை அடைந்தது.  மும்பையில் இன்று நடைபெறவுள்ள லீக் ஆட்டங்களில் யு மும்பா  - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும், பெங்கால் வாரியர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளும் மோதுகின்றன.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.