புரோ கபடி: மும்பையை வீழ்த்தி குஜராத் வெற்றி!

  Newstm News Desk   | Last Modified : 11 Nov, 2018 09:12 am

pro-kabaddi-2018-u-mumba-vs-gujarat-fortune-giants

புரோ கபடி தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் மும்பை அணியை 38-36 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி குஜராத் அணியும் பெங்கால் அணியை 50-30 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி  பாட்னா அணியும் வெற்றி பெற்றன. 

புரோ கபடி தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த 57வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் யு மும்பா (மும்பை அணி) அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி 5 நிமிடங்கள் எஞ்சி இருந்தபோது 30-26 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 

அந்த சமயத்தில் குஜராத் மாற்று ஆட்டக்காரர் மகேந்திர ராஜ்புத் ஒரே ரைடில் 5 பேரை அவுட் ஆக்கி, ஆல்-அவுட்டும் செய்ததால், ஆட்டம் குஜராத் பக்கம் திரும்பியது. முடிவில் குஜராத் அணி 38-36 என்ற புள்ளி கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 50-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்து 5-வது வெற்றியை பெற்றது.

இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் -தபாங் டெல்லி (இரவு 8 மணி), யு மும்பா-அரியானா ஸ்டீலர்ஸ்  அணிகள் சந்திக்கின்றன. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.