புரோ கபடி: ஹரியானாவுடன் டிரா செய்தது தமிழ் தலைவாஸ்

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2018 05:38 am
pro-kabaddi-league-tamil-thalaivas-draw-with-haryana-steelers

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியுடன் தமிழ் தலைவாஸ் அணி மோதிய புரோ கபடி லீக் போட்டியில், கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி 32-32 என்ற புள்ளிகள் கணக்கில் டிரா செய்தது.

மும்பையில் நடைபெற்ற புரோ கபடி லீக் தொடரின் போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸுடன் தமிழ் தலைவாஸ் அணி மோதியது. இந்த போட்டியில் சிறப்பான துவக்கம் பெற்ற தமிழ் தலைவாஸ் அணி முதல் 5 நிமிடங்களிலேயே 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னேற்றமடைந்தது. அதன் பின்னும் தொடர்ந்து தலைவாஸ் ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி முடியும் நேரத்தில் ஹரியானா அணி சிறப்பாக விளையாடி 19-15 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தொடர்ந்து போராடின. 26-24 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானா முன்னேற்றம் பெற்றிருந்த நிலையில், தமிழ் தலைவாஸ் உத்வேகத்துடன் விளையாடியது. கடைசி வரை போராடிய தமிழ் தலைவாஸ் அணி, 32-32 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டியை டிரா செய்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close