கரூர்: பள்ளி மாணவர்களுக்கான எறிபந்து போட்டி

  Newstm Desk   | Last Modified : 16 Nov, 2018 04:36 pm
throwball-tournament-for-school-boys-and-girls

கரூரில் பள்ளிக் கல்வி துறை சார்பில் நடைபெற்ற எறிபந்து போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 

கரூர் மாவட்டம், மணவாடி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், தமிழ்நாடு பள்ளிகல்வி துறை சார்பில், 61வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு பள்ளி  மாணவ, மாணவிகளுக்கான எறிபந்து போட்டிகள் நடைபெற்றன. போட்டியை நாட்டு நலப்பணி இயக்கத்தின் (NSS) இணை இயக்குநர்  வாசு தொடங்கி வைத்தார்.

இன்று நடைபெற்ற போட்டியில் மாணவியர் பிரிவில், ஈரோடு மாவட்டம் தாராபுரம் அலுசீயஸ் பள்ளியும் (ஈரோடு மண்டலம்), மாணவர்கள் பிரிவில் திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடம் கலைவாணி பள்ளியும் (திருநெல்வேலி மண்டலம்) வெற்றி பெறறுள்ளன. இறுதிப் போட்டி வரும் 18ஆம் தெதி நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு எறிபந்து சங்க த் தலைவர் பாலவிநாயகம் தெரிவித்துள்ளார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close