அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள் 

  டேவிட்   | Last Modified : 17 Nov, 2018 12:20 am
tamilnadu-boys-girls-enters-semi-finals

குஜராத்தில் நடைபெற்றுவரும் தேசிய ரோல்பால் போட்டியில் தமிழக சிறுவர் மற்றும் சிறுமியர், இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

குஜராத் மாநிலத்தில் சிறுவர் சிறுமிருக்கான தேசிய ரோல்பால் போட்டி கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள தமிழக சிறுவர் மற்றும் சிறுமியர், இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இன்று (நவ.17) காலை நடைபெறவுள்ள சிறுவர் அரையிறுதிப்போட்டியில் தமிழக அணி, அசாம் அணியுடனும், ராஜஸ்தான் அணி, மகாராஷ்டிரா அணியுடனும் மோதுகின்றன. சிறுமியர் பிரிவில் தமிழக அணி மகாராஷ்டிரா அணியுடனும், உத்தரப்பிரதேச அணி டெல்லி அணியுடனும் மோதுகின்றன. 

இன்று மாலை இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு ரோல்பால் சங்கம் தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close