குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இளம் இந்திய வீராங்கனை அபார வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 17 Nov, 2018 06:33 am
world-boxing-championship-manisha-stuns-heavyweight

புதுடெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இளம் இந்திய வீராங்கனை மனிஷா மவுன், அமெரிக்க நட்சத்திர வீராங்கனை கிறிஸ்டினா க்ரூஸை 5-0 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

வெறும் 21 வயதேயான இளம் இந்திய வீராங்கனை மனிஷா மவுன், 36 வயதான அமெரிக்க வீராங்கனை க்ரூஸுடன் மோதினார். க்ரூஸ், இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்றவராவார். மிகச் சிறப்பாக குத்துசண்டை போட்ட மனிஷா, முழு ஆதிக்கம் செலுத்தி முதல் சுற்றை கைப்பற்றினார். இரண்டாவது ரவுண்டில் க்ரூஸ் சற்று முன்னேற்றம் கண்டார். ஆனால் பின், மீண்டு வந்த மனிஷா, மீண்டும் சிறப்பாக விளையாடி, வெற்றி பெற்றார்.

போட்டியை கண்ட ஐந்து நீதிபதிகளில், அனைவருமே மனிஷாவுக்கு சாதகமாக வாக்களித்தனர். 29-28, 30-27, 30-26, 30-26, 29 28 என்ற செட் கணக்கில் மனிஷா அபார வெற்றி பெற்றார், அடுத்த போட்டியில் கசகஸ்தான் நாட்டை சேர்ந்த டினா சோலமேனுடன் மனிஷா மோதுகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close