தேசிய ரோல்பால் போட்டி: தங்கம் வென்ற தமிழகம்

  டேவிட்   | Last Modified : 17 Nov, 2018 05:07 pm
tamilnadu-girls-secured-gold-in-national-rollball-championship

குஜராத்தில் நடைபெற்ற தேசிய ரோல்பால் போட்டியில் தமிழக சிறுமியர் அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. தமிழக சிறுவர் அணி வெண்கலத்தை வென்றுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் சிறுவர் சிறுமிருக்கான தேசிய ரோல்பால் போட்டி கடந்த 15ஆம் தேதி தொடங்கியது.  இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், தமிழக சிறுமியர் அணி, உத்தரப் பிரதேச அணியுடன் மோதின. இதில், தமிழக அணி 6-3 என்ற புள்ளிக் கணக்கில் உத்தரப்பிரதேச அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. மூன்றாவது இடத்தை மகாராஷ்டிராவும், நான்காவது இடத்தை டெல்லியும் பிடித்துள்ளன. 

சிறுவர் பிரிவில் அசாம், ராஜஸ்தான், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய அணிகள், முறையே ஒன்று முதல் நான்காவது இடத்தைக் கைப்பற்றியுள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close