புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி

  டேவிட்   | Last Modified : 18 Nov, 2018 01:32 am
pro-kabaddi-league-bengal-beat-pune

புரோ கபடி லீக் போட்டியில் குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் புனே பல்டன் அணியை வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ் அணி தனது ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டியில்  தற்போது இண்டர்ஜோன் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குஜராத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புனே பல்டன் அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 13-12 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி முன்னிலை வகித்தது. இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 26 - 22 என்ற புள்ளிக்கணக்கில் புனே பல்டன் அணியை வீழ்த்தி, இந்த வெற்றியின் மூலம் பெங்கால் அணி தனது ஐந்தாவது வெற்றியை பெற்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close