எறிபந்து போட்டி: தங்கத்தை தட்டிச் சென்ற ஈரோடு மண்டலம் 

  டேவிட்   | Last Modified : 18 Nov, 2018 03:26 pm
throwball-championship-erode-division-won-the-title

கரூரில் பள்ளிக் கல்வி துறை சார்பில் நடைபெற்ற மண்டல அளவிலான எறிபந்து போட்டியில், மாணவர் பிரிவில் ஈரோடு மண்டலமும், மாணவியர் பிரிவில் காஞ்சிபுரம் மண்டலமும் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றன. 

கரூர் மாவட்டம், மணவாடி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், தமிழ்நாடு பள்ளிகல்வி துறை சார்பில், 61வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு பள்ளி  மாணவ, மாணவிகளுக்கான மண்டல அளவிலான எறிபந்து போட்டிகள் நடைபெற்றன. 

மாணவர்கள் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், பி.வி.கே.என். மேல்நிலை பள்ளி, பொங்கலூர் திருப்பூர் மாவட்டம் (ஈரோடு மண்டலம்) 15-10,6-15,15-8 என்ற புள்ளிக் கணக்கில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, வாங்கல் கரூர் மாவட்டம் (பெரம்பலூர் மண்டலம்) அணியை வீழத்தி வெற்றி பெற்றது. தூய இருதய மெட்ரிக் மேல்நிலை பள்ளி சோலிங்கநல்லூர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

இதேபோல், மாணவியர் பிரிவில் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி திருவள்ளுர் மாவட்டம் (காஞ்சிபுரம் மண்டலம்) முதல் இடத்தையும், ஏ.வி.எஸ்.உயர்நிலை பள்ளி, புளியங்குடி (திருநெல்வேலி மண்டலம்) இரண்டாவது இடத்தையும், ஆரோக்கியமாதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி கருமண்டபம் (திருச்சி மண்டலம்) மூன்றாவது இடத்தையும் கைப்பற்றின. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close