கேலோ-இந்தியா விளையாட்டு: தமிழக கைப்பந்து அணி தேர்வு

  டேவிட்   | Last Modified : 21 Nov, 2018 02:56 pm
selection-trials-of-tn-men-and-women-teams-for-khelo-india

தேசிய இளையோர் விளையாட்டு போட்டிக்கான தமிழக கைப்பந்து அணிகள் தேர்வு சென்னையில் வருகிற 25-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. 

21 வயதுக்குட்பட்டோருக்கான ‘கேலோ இந்தியா’ இளையோர் விளையாட்டுப் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஜனவரி 14-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து அணி தேர்வு சென்னையில் வருகிற 25-ந் தேதி காலை 7 மணிக்கு  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆண்கள் அணி தேர்வு நேரு ஸ்டேடியத்திலும், பெண்கள் அணி தேர்வு நேரு உள்விளையாட்டு அரங்கிலும் நடைபெறுகிறது. 1.1.1998-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம் எனவும், இந்த தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகள் உரிய வயது சான்றிதழுடன் வர வேண்டும் எனவும், தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close