உலக குத்துச்சண்டை போட்டி:  4 பதக்கங்களை உறுதி செய்தது இந்தியா

  டேவிட்   | Last Modified : 21 Nov, 2018 03:06 pm
world-women-s-boxing-4-medals-assured-for-india

உலக மகளிர் குத்துச்சண்டை அரை இறுதி போட்டியில் மேரிகோம், சாஹல், லோவிலினா, சிம்ரன்ஜித் கவூர், ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் 4 பதக்கங்களை இந்தியா உறுதி செய்துள்ளது. 

டெல்லியில் நடைபெற்று வரும் 10-வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியின் அரை இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனைகளான மேரிகோம் (48 கிலோ பிரிவு), சோனியா சாஹல் (57 கிலோ பிரிவு) லோவிலினா போர்கோஹன் (69 கிலோ பிரிவு), சிம்ரன்ஜித் கவூர் (64 கிலோ பிரிவு) ஆகிய 4 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதன்மூலம் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியாகியுள்ளது.

பிங்கிராணி, மனிஷா, பாக்யபதி, சீமா புனியா ஆகிய 4 இந்திய வீராங்கனைகளும் காலிறுதியில் தோல்வியடைந்தனர்.  மேரிகோம் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் ஏற்கனவே 5 தங்கமும், ஒரு வெள்ளியும் பெற்று இருந்தார். தற்போது பெறப்போகும் இந்த ஒரு பதக்கதால் பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து புதிய சாதனை படைப்பார்.  அயர்லாந்து வீராங்கனை கேட்டி டெய்லர் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் 6 பதக்கம் வென்றதே இதற்கு முன் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close