புரோ கபடி - தமிழ் தலைவாசை வீழ்த்தி வெற்றி பெற்றது பாட்னா

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2018 09:12 am
pro-kabaddi-patna-team-beat-the-tamil-nadu-team

புரோ கபடி லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி, தமிழ் தலைவாசை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

6-வது புரோ கபடி லீக் தொடரில் 74-வது லீக் ஆட்டம் நேற்றிரவு ஆமதாபாத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான பாட்னாவின் பைட்ரஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணியுடன் மோதியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பைட்ரஸ் அணி 45-27 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான யு மும்பாவுடன் விளையாடியது. இதில் 39-35 என்ற புள்ளி கணக்கில் யு மும்பாவை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. 

இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close