தேசிய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டிகளில் 21 தங்க பதக்கங்களை குவித்த தமிழக வீரர், வீராங்கனைகள்

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2018 01:10 pm
21-gold-medals-won-at-national-rural-sports-competition

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று தாயகம் திரும்பிய தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சேலத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஜம்மு-காஷ்மீர் பல்கலைக்கழகத்தில், கடந்த 17,18 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தேக்வாண்டா, ஜூடோ, ஃபாக்சிங், தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் நடத்தப்பட்டன. தமிழகம் சார்பில், சேலம், நாமக்கல், சென்னை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, 21 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றனர். இந்நிலையில், பதக்கங்களோடு  ஊர் திரும்பிய மாணவ, மாணவிகளும் சேலம் ரயில் நிலையத்தில், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அடுத்தகட்டமாக நேபாளில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close