குத்துசண்டை சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் மேரி கோம்!

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2018 09:15 pm
mary-kom-advances-to-aiba-48kg-final

மகளிருக்கான உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் தொடரில், மகளிருக்கான 48 கிலோ ப்ளைவெயிட் அரையிறுதி போட்டியில், வடகொரிய வீராங்கனை கிம் ஹியாங் மீயை இந்திய வீராங்கனை மேரி கோம் 5-0 என வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்று வரும் மகளிருக்கான உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீராங்கனை மேரி கோம், வடகொரிய வீராங்கனை கிம் ஹியாங் மீயை 48 கிலோ எடைப்பிரிவினருக்கான அரையிறுதி போட்டியில் சந்தித்தார். 2001ம் ஆண்டு முதல்முதலாக உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற மேரி கோம், இதுவரை 5 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

35 வயதான மேரி கோம், கடும் எதிர்பார்ப்புக்கு இடையே சிறப்பான துவக்கத்தை பெற்றார். 3 சுற்றிலும் சிறப்பாக விளையாடிய கோம், 5-0 என நடுவார்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதிப் போட்டியில், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஹன்னா ஒக்கோட்டாவுடன் கோம் மோதுகிறார். 

கடைசியாக 2010ம் ஆண்டு தங்கம் வென்றிருந்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது அவருக்கு மீண்டும் தங்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் வெற்றி பெற்றால், பாக்சிங் சரித்திரத்தில் அதிக தங்க பதக்கங்கள் வென்ற பெண் எனும் சாதனையை மேரி கோம் படைக்க வாய்ப்புள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close