புரோ கபடி: புனே அணி அதிரடி வெற்றி

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 11:28 am
pro-kabaddi-pune-team-win

புரோ கபடி லீக் போட்டியின் 85வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி புனே அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

6-வது புரோ கபடி லீக் போட்டியின், 85வது லீக் ஆட்டம் புனேயில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் ’ஏ’ பிரிவில் புனேரி பால்டன் அணி அரியானா ஸ்டீலர்சை எதிர்கொண்டது. முதல் பாதியில் பின் தங்கி இருந்த புனே அணி, திடீரென எழுச்சியுற்று வெறிதனமாக விளையாடி 35-33 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 

மற்றொரு ஆட்டத்தில்  பெங்களூரு புல்ஸ் அணி தெலுங்கு டைட்டன்சை எதிர்கொண்டது. இதில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி 34-26  என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியுடனும், இரவு 9 மணிக்கு பெங்களூரு புல்ஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியுடனும் மோதுகின்றன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close