குத்துச்சண்டையில் ஊழலா? விசாரணை நடத்தும் ஒலிம்பிக் கமிட்டி

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 06:51 am
ioc-launches-probe-into-aiba

சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (AIBA), பல்வேறு ஊழல் விவகாரங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, 2020 ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை இடம்பெற வாய்ப்பு கம்மி என்றும், தெரிவித்துள்ளது.

சமீபத்தில் சர்வதேச குத்துச்சண்டை அசோசியேஷனில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. மிகவும் சர்ச்சைக்குரிய உஸ்பெகிஸ்தான் தொழிலதிபரான கஃபூர் ரக்கினோவை தனது தலைவராக தேர்ந்தெடுத்தது AIBA.

பல கிரிமினல் கேங்ஸ்டர்களுடன் தொடர்புடையவராக கருதப்படும் ராகினோவ் மீது அமெரிக்க அரசு தனி விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, கடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் பல்வேறு மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் மாஃபியா தொடருடைய ஒரு சர்ச்சைக்குரிய நபரை, குத்துச்சண்டை சங்கத்தின் தலைவராக நியமித்துள்ளது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதனால் AIBA மீது விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த விசாரணை முடிந்த பின்னால் 2020 ஒலிம்பிக் தொடரில் குத்துச்சண்டை போட்டிகள் தொடர்வதா, வேண்டாமா என்பது பற்றி முடிவெடுக்கப்படும், என்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close