ராசியில்லை! டெல்லி கேபிடல்ஸ் என பெயரை மாற்றிக்கொண்ட டெல்லி டேர் டெவில்ஸ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Dec, 2018 08:20 pm
delhi-daredevils-renamed-as-delhi-capitals

பிரபல ஐபிஎல் தொடர்களில் இதுவரை டெல்லி அணி ஒருமுறைக்கூட வென்றது இல்லை. இந்நிலையில் டெல்லி அணி ”டெல்லி கேபிடல்ஸ்” என்ற புதுப்பெயருடன் களமிறங்க உள்ளது. 

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி ஒரு முறைகூட கோப்பை தொட்டுப் பார்த்தது இல்லை. இதனால் ராசியில்லை என்பதை புரிந்துகொண்ட டெல்லி அணி பெயரை மாற்றினாலாவது அதிர்ஷ்டம் வருமா? என சிந்தித்து டெல்லி கேபிடல்ஸ் என்று புதுபெயரை வைத்துள்ளது. ஜி.எம்.ஆர். குரூப் மற்றும் ஜே.எஸ்.டிபிள்யூ. ஸ்போட்ர்டஸ் ஆகிய நிறுவனங்கள் டெல்லி அணியை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றக்கூட்டத்தில் இந்த பெயர்மாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியாவில் நடக்கும் யூ.பி.ஏ. என்ற கூடைப்பந்தாட்ட லீக் போட்டிகளில் இதே பெயரில் ஒரு அணி விளையாடுவது குறிப்பிடதக்கது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close