அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி !

  டேவிட்   | Last Modified : 08 Dec, 2018 12:25 am
sports-for-government-officials-in-tirunelveli

நெல்லையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில், அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளை நெல்லையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் கைப்பந்தை அடித்து தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், வெற்றி தோல்வியை பார்க்காமல் சந்தோஷத்தை மட்டுமே அனுபவித்து விளையாட வேண்டும் என குறிப்பிட்டார். 

வேளாண்துறை, வருவாய் துறை, கருவூலம், சமுகதலம், தொழிலாளர் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கைப்பந்து, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் முதல் இடத்தை பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close