மாநில கைப்பந்து போட்டி: காலிறுதியில் திருவாரூர் அணிகள்

  டேவிட்   | Last Modified : 09 Dec, 2018 04:01 pm
tiruvarur-teams-in-quarter-finals-of-state-junior-volleyball-championship-at-chennai

சென்னையில் நடைபெற்று வரும்  44வது ஜுனியர் கைப்பந்து போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் இரு பிரிவுகளிலும் திருவாரூர் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவர் மற்றும் மகளிருக்கான 44வது ஜுனியர் கைப்பந்து போட்டி கடந்த 7ஆம் தொடங்கியது. வரும் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். 

இப்போடடியில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், நீலகிரி, திருவாரூர், தருமபுரி, கோவை, ஈரோடு ஆகிய 8 அணிகள் இன்று மாலை நடைபெறவுள்ள காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன.  இதேபோல், ஆடவர் பிரிவில், திருவாரூர், கோவை, நாமக்கல், தூத்துக்குடி, தருமபுரி, திருவள்ளுர், கிருஷ்ணகிரி, திருச்சி ஆகிய எட்டு அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. 

அரையிறுதிப் போட்டிகள் நாளை (டிச.10) காலை 6.30 மணிக்கும், இறுதிப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும், அதே நாள் மாலையில் நடைபெறும் எனவும் தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத்தின் அட்ஹாக் கமிட்டி தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close