மாநில கைப்பந்து: அரையிறுதியில் சேலம், காஞ்சிபுரம், திருவாரூர், ஈரோடு

  டேவிட்   | Last Modified : 09 Dec, 2018 08:15 pm
salem-kanchi-tiruvarur-erode-qualifed-for-junior-volleyball-semi-finals

சென்னையில் நடைபெற்று வரும்  44வது ஜுனியர் கைப்பந்து போட்டியில் சிறுமியர் பிரிவில் சேலம், காஞ்சிபுரம், திருவாரூர், ஈரோடு ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 44வது ஜுனியர் கைப்பந்து போட்டி கடந்த 7ஆம் தொடங்கியது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். 

இன்று மாலை (டிசம்பர் 9) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், சிறுமியர் பிரிவில் திருவாரூர் அணி 22-25, 25-22, 25-18, 25-19 என்ற புள்ளிக் கணக்கில் தருமபுரி அணியை வீழத்தி வெற்றி பெற்றது.  நீலகிரி அணியை 22-25, 25-12, 25-22,25-10 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சேலம் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றறுள்ளது. இதேபோல் காஞ்சிபுரம் அணி 25-23, 25-21, 27-25 என்ற புள்ளிக் கணக்கில் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது.  மேலும், ஈரோடு அணி கோவை அணியை 25-07, 25-18, 25-13 என எளிதாக வீழ்த்தியது. இதன் மூலம், சேலம், காஞ்சிபுரம், திருவாரூர், ஈரோடு ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

காலிறுதிப் போட்டியின் சிறுவர் பிரிவில் கோவை அணி 25-23, 25-12, 25-13 என்ற புள்ளிக்கணக்கில் திருவாரூர் அணியை வீழ்த்தியும், நாமக்கல் அணி  25-19, 21-25, 25-22, 25-18 என தூத்துக்குடி அணியை வீழ்த்தியும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.  

அரையிறுதிப் போட்டிகள் நாளை (டிச.10) காலை 6.30 மணிக்கும், இறுதிப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும், அன்று மாலை நடைபெறும் எனவும் தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத்தின் அட்ஹாக் கமிட்டி தெரிவித்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close