மாநில ஜூனியர் கைப்பந்து போட்டி: இறுதிப் போட்டியில் யார்?

  டேவிட்   | Last Modified : 10 Dec, 2018 12:41 am
junior-volleyball-who-will-qualify-for-finals

சென்னையில் நடைபெற்று வரும்  44வது ஜுனியர் கைப்பந்து போட்டியில் சிறுமியர் பிரிவில் சேலம், காஞ்சிபுரம், திருவாரூர், ஈரோடு ஆகிய அணிகளும், சிறுவர் பிரிவில் கோவை, நாமக்கல், தருமபுரி, திருச்சி ஆகிய அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. 

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 44வது ஜுனியர் கைப்பந்து போட்டி கடந்த 7ஆம் தொடங்கியது. காலிறுதிப் போட்டிகள் நேற்று (டிச.9) மாலை நடைபெற்றது. இதில், சிறுமியர் பிரிவில் சேலம், காஞ்சிபுரம், திருவாரூர், ஈரோடு ஆகிய அணிகளும், சிறுவர் பிரிவில் கோவை, நாமக்கல், தருமபுரி, திருச்சி ஆகிய அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. 

 

அரையிறுதிப்போட்டியில் சிறுமியர் பிரிவில் சேலம்-காஞ்சிபுரம் அணிகளும், திருவாரூர்-ஈரோடு அணிகளும் மோதுகின்றன. இதேபோல், சிறுவர் பிரிவில், கோவை-நாமக்கல் அணிகளும், தருமபுரி-திருச்சி ஆகிய அணிகளும் பலப்பரீட்சை செய்கின்றன. 

அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணி இன்று மாலை (டிச.10) நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர். இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்பார்கள் என தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத்தின் அட்ஹாக் கமிட்டி தெரிவித்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close