புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸை வீழ்த்தியது ஜெய்ப்பூர்

  Newstm Desk   | Last Modified : 10 Dec, 2018 05:05 am
pro-kabaddi-league-jaipur-pink-panthers-beat-tamil-thalaivas

விசாகப்பட்டினத்தில், விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணியை 37-24 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள புரோ கபடி லீக் தொடரில், மோசமாக விளையாடி வரும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் மோதின. கடைசியாக நடைபெற்ற 18 போட்டிகளில் 10 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்திருந்த நிலையில், 15 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது ஜெய்ப்பூர் அணி.

ஜெய்ப்பூர் அணியின் தீபக் நிவாஸ், சிறப்பாக விளையாடி 8 புள்ளிகளை எடுத்தார். அந்த அணியின் ஆனந்த் பாட்டில் 6 புள்ளிகளும், சுனில் சித்கவாலி 5 புள்ளிகளும் எடுத்தனர். தமிழ் தலைவாஸ் அணியின் சுகேஷ் ஹெக்டே 6 புள்ளிகளும், ஜஸ்வீர் சிங் 3 புள்ளிகளும் எடுத்தனர். முதல் பாதி முடியும் போது ஜெய்ப்பூர் 17-10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது பாதியில், ஜெய்ப்பூர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடியது. இறுதியில் 37-24 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் அபார வெற்றி பெற்றது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close