மாநில கைப்பந்து போட்டி: கோப்பையை வெல்லப்போவது யார்...?

  டேவிட்   | Last Modified : 10 Dec, 2018 10:59 am
state-junior-volleyball-who-will-win-the-trophy

சென்னையில் நடைபெற்று வரும்  44வது தமிழ்நாடு மாநில ஜுனியர் கைப்பந்து போட்டியில் சிறுவர் பிரிவில் கோவை, திருச்சி அணிகளும், சிறுமியர் பிரிவில் சேலம், ஈரோடு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. 
 
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 44வது தமிழ்நாடு மாநில ஜுனியர் கைப்பந்து போட்டி கடந்த 7ஆம் தொடங்கியது. இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது. 

இன்று (டிச.10) காலை நடைபெற்ற அரையிறுதிப் போடடியின் சிறுவர் பிரிவில் கோவை அணி 25-17,25-10,25-21 என நாமக்கல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் திருச்சி அணி 25-11,25-20,25-19 என்ற புள்ளிக் கணக்கில் தருமபுரி அணியை வீழ்த்தியது. 

சிறுமியர் பிரிவில் சேலம் அணி 25-21,21-25,25-20,25-11 என்ற புள்ளிக் கணக்கில் காஞ்சிபுரம் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் ஈரோடு அணி 23-25,25-19,25-17,25-16 என திருவாரூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இன்று (டிச.10) மாலை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிகளில் சிறுவர் பிரிவில் கோவை அணியும் திருச்சி அணியும் மோதுகின்றன. சிறுமியர் பிரிவில் சேலம்-ஈரோடு அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இறுதிப் போட்டிக்குப் பின்னர் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close