புரோ கபடி லீக்; உ.பி யோதா - தமிழ் தலைவாஸ் போட்டி டிரா!

  Newstm Desk   | Last Modified : 16 Dec, 2018 03:48 am
pro-kabaddi-league-up-yoddha-tamil-thalaivas-match-ends-draw

ப்ரோ கபடி லீக் தொடரில், மோசமாக விளையாடி வரும் உத்தரபிரதேச யோதா அணியுடன் தமிழ் தலைவாஸ் மோதிய போட்டி 25-25 என்ற புள்ளிகள் கணக்கில் டிரா ஆனது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரின் குரூப் பி-யில், 5வது இடத்தில் உள்ள உத்தரபிரதேச யோதா அணி, 6வது மட்டும் கடைசி இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸுடன் மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தமிழ் தலைவாஸ் அணி ஒரு இடம் முன்னேற வாய்ப்பு இருந்தது.

சிறப்பாக போட்டியை துவக்கிய தமிழ் தலைவாஸ் அணி, சில நிமிடங்களிலேயே 5-1 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் அதன் பின்னர் மீண்டு வந்து தொடர்ந்து புள்ளிகள் எடுத்தனர் யோதாஸ். முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ், 13-10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியிலும் சிறிதுநேரம் முன்னிலை பெற்ற தமிழ் தலைவாஸ், அதன்பின்னர் கோட்டைவிட்டது. கடைசிவரை யோதா அணி போராடி, 25-25 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டியை டிரா செய்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close