சென்னையில் மாநில கைப்பந்து போட்டி இன்று தொடக்கம் !

  டேவிட்   | Last Modified : 17 Dec, 2018 02:46 pm
senior-national-volleyball-championship-at-chennai

சென்னையில், ஆடவர் மற்றும் மகளிருக்கான மாநில கைப்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் இதில் பங்கேற்கின்றன. 

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்களில் ஆடவர் மற்றம் மகளிருக்கான 68வது மாநில கைப்பந்து போட்டி இன்று (டிச.17) மாலை தொடங்குகிறது. 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 50க்கும் அணிகள் இதில் பங்கேற்கின்றன. 

இப்போட்டியின் துவக்க விழா இன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, கால்ஸ் நிறுவன இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர். 

போட்டிகள் லீக் மற்றம் நாக் அவுட் முறையில் நடைபெறுவதாகவும், இறுதிப் போட்டி நிறைவு நாளான 21ஆம் தேதி நடைபெறும் எனவும், தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத்தின் அட்ஹாக் கமிட்டி சேர்மன் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close