மாநில கைப்பந்து போட்டி: இந்தியன் வங்கியை வீழ்த்தியது ஐஓபி...!

  டேவிட்   | Last Modified : 17 Dec, 2018 11:46 pm
state-volleyball-iob-beat-indian-bank

சென்னையில், ஆடவர் மற்றும் மகளிருக்கான மாநில கைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட ஆடவர் மற்றம் மகளிர் அணிகள் இதில் பங்கேற்று வருகின்றன. 

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்களில் ஆடவர் மற்றம் மகளிருக்கான 68வது மாநில கைப்பந்து போட்டி நேற்று (டிச.17) தொடங்கியது. 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 50க்கும் அணிகள் ஆடவர் மற்றும் பெண்கள் அணிகள் இதில் பங்கேற்று வருகின்றன. 

நேற்றைய லீக் ஆட்டம் ஒன்றில் ஐ.ஓ.பி. அணியும் இந்தியன் வங்கியும் மோதின. இதில் ஐ.ஓ.பி. அணி 25-20, 25-19 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

மற்ற லீக் ஆட்டங்களில், சத்யபாமா கல்லூரி, திருவாரூர் வேலுடையார், பனிமலர் கல்லூரி, ராமகிருஷ்ணா கிளப், லைஃப் ஸ்போர்ட் அகாடமி, சோல்கா இகாடா, திருச்சி பிஷப், சாய் அணி, எஸ்.டி.ஏ.டி., நியூ லைஃப் உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 

போட்டிகள் லீக் மற்றம் நாக் அவுட் முறையில் நடைபெறுவதாகவும், இறுதிப் போட்டி நிறைவு நாளான 21ஆம் தேதி நடைபெறும் எனவும், தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத்தின் அட்ஹாக் கமிட்டி தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close