சென்னை ஸ்பைக்கர்ஸ் வெற்றி ! ஐஓபிக்கு இரண்டாவது வெற்றி !!

  டேவிட்   | Last Modified : 18 Dec, 2018 10:58 pm
state-volleyball-championship-chennai-spikers-iob-won-the-league-match

சென்னையில் நடைபெற்று வரும் 68வது மாநில கைப்பந்து போட்டியில் செயின்ட் ஜோசப் அணியை வீழ்த்தி, ஐ.ஓ.பி. அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்களில் ஆடவர் மற்றம் மகளிருக்கான 68வது மாநில கைப்பந்து போட்டி நேற்று (டிச.17) தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் அணி 25:19,25:21 என்ற புள்ளிக் கணக்கில் செயின்ட் ஜோசப் அணியை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. மற்றொரு லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி 25:23,25:12 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும், ஒய்.எம்.சி.ஏ., குருநானக் கல்லூரி, வேலுடையார், பிஷப் ஹெபர், அமுதா கிளப்,  குமரன் கிளப், கஸ்டம்ஸ், வருமான வரித்துறை உள்ளிட்ட அணிகளும் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. 

மகளிர் பிரிவின் லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு போலீஸ் அணி 25-17, 25-18 என்ற புள்ளிக் கணக்கில் பனிமலர் கல்லூரியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஜி.கே.எம்., செயின்ட மேரிஸ் சேலம், பி.ஆர்.நடராஜன், சாய், திருச்சி பிஷப் உள்ளிட்ட அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close