மாநில கைப்பந்து: முதன்முறையாக பங்கேற்ற ஐ.சி.எப். மகளிர் அணி அசத்தல்...!

  டேவிட்   | Last Modified : 19 Dec, 2018 09:47 am
state-volleyball-icf-women-won-it-s-first-match

சென்னையில் நடைபெற்று வரும் 68வது மாநில கைப்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் மகளிர் பிரிவில் ஐ.சி.எப். அணி, சென்னை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்களில் ஆடவர் மற்றும் மகளிருக்கான 68வது மாநில கைப்பந்து போட்டி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இதில் நேற்று (டிச.18) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐ.சி.எஃப். மகளிர் அணி 25-04, 25-05 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை பெண்கள் அணியை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐ.சி.எப். கைப்பந்து அணி மாநில கைப்பந்து போட்டியில் பங்கேற்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு லீக் ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. அணி 25-11, 25-12 என்ற புள்ளிக் கணக்கில் பி.கே.ஆர். கல்லூரி அணியை வீழத்தி வெற்றி பெற்றது. 

முன்னதாக, இந்தியன் ஓவர்சீஸ் அணி 25:19,25:21 என்ற புள்ளிக் கணக்கில் செயின்ட் ஜோசப் அணியையும்,  சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி 25:23,25:12 என தமிழ்நாடு போலீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும், ஒய்.எம்.சி.ஏ., குருநானக் கல்லூரி, வேலுடையார், பிஷப் ஹெபர், அமுதா கிளப்,  குமரன் கிளப், கஸ்டம்ஸ், வருமான வரித்துறை உள்ளிட்ட அணிகளும் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. 

நேற்று (டிச.18) நடைபெற்ற மகளிர் பிரிவின் லீக் ஆட்டங்களில், தமிழ்நாடு போலீஸ் அணி 25-17, 25-18 என்ற புள்ளிக் கணக்கில் பனிமலர் கல்லூரியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஜி.கே.எம்., செயின்ட மேரிஸ் சேலம், பி.ஆர்.நடராஜன், சாய், திருச்சி பிஷப் உள்ளிட்ட அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. 

அரையிறுதிப் போடடிகள் வரும் 21ஆம் தேதியும், இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா 22ஆம் தேதி மாலை நடைபெறும் எனவும் தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக அட்ஹாக் கமிட்டி தெரிவித்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close