மாநில கைப்பந்து போட்டி: காலிறுதியில் சிவந்தி, ஐ.சி.எப். அணிகள்  பலப்பரீட்சை...!

  டேவிட்   | Last Modified : 19 Dec, 2018 02:53 pm
volleyball-quarter-finals-sivanthi-icf-entered

சென்னையில் நடைபெற்று வரும் 68வது மாநில கைப்பந்து போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று காலிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன. 

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்களில் ஆடவர் மற்றும் மகளிருக்கான 68வது மாநில கைப்பந்து போட்டி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இன்று (டிச.19) காலை வரை லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்தன. 

இந்நிலையில் காலிறுதிக்கு தகுதிபெற்ற அணிகள் யார் என்பதை தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக அட்ஹாக் கமிட்டி தெரிவித்துள்ளது. இன்று மாலையில் இருந்து இரவு வரை நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியின் மகளிர் பிரிவில் பலம் வாய்ந்த சிவந்தி அணியும், முதன் முதலாக கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் ஐ.சி.எப். அணியும் பலப்பரீட்சை செய்கின்றன.

ஐ.சி.எப். மகளிர் கைப்பந்து அணி அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் மூன்று மாதங்களே ஆகின்றன. இந்நிலையைில் ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டு வரும் சிவந்தி அணியை வீழ்த்துமா, அல்லது புத்தம் புதிய அணியான ஐ.சி.எப். வீழ்ந்து போகுமா என கைப்பந்து ரசிகர்களின் மனதில் கேள்வியை எழுப்பியுள்ளது. 

மற்ற காலிறுதிப் போட்டிகளில், ஜி.கே.எம்.-பனிமலர் கல்லூரி, தமிழ்நாடு போலீஸ்-பி.கே.ஆர்.கல்லூரி, எஸ்.டி.ஏ.டி.-செயின்ட்ஜோசப் ஆகிய அணிகள் மோதுகின்றன. 

அரையிறுதிப் போடடிகள் வரும் 20ஆம் தேதியும், இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா 21ஆம் தேதி மாலையும் நடைபெறவுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close