தேசிய எறிபந்து போட்டி: தமிழக அணிகள் அறிவிப்பு !

  டேவிட்   | Last Modified : 19 Dec, 2018 05:52 pm
tamilnadu-team-announced-for-national-throwball-championship

சண்டிகரில் நடைபெறவுள்ள தேசிய சீனியர் எறிபந்து போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக அணியின் பெயர் பட்டியலை தமிழ்நாடு எறிபந்து சங்கம் வெளியிட்டுள்ளது. 

இந்திய எறிபந்து சம்மேளனம் நடத்தும் 41வது தேசிய சீனியர் எறிபந்து போட்டி சண்டிகரில் வரும் 26 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்றவுள்ள தமிழக ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் வீரர், வீராங்கனைகளின் பெயர்களை தமிழ்நாடு எறிபந்து சங்கம் வெளியிட்டுள்ளது. 

கரூரைச் சேர்ந்த மும்மூர்த்தி ஆடவர் அணியின் கேப்டனாகவும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்ஷிணி மகளிர் அணியின் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பயிற்சியாளர்களாக கவியரசன், கோமதி ஆகியோரும், அணி மேலாளர்களாக பிராகாஷ், தியாகு ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close