மாநில சீனியர் கைப்பந்து போட்டி: அரையிறுதியில் யார்?

  டேவிட்   | Last Modified : 20 Dec, 2018 12:17 am
state-volleyball-quarter-finals-results

சென்னையில் நடைபெற்று வரும் 68வது மாநில கைப்பந்து போட்டியின் மகளிர் பிரிவில், ஐ.சி.எஃப், ஜிகேஎம், எஸ்டிஏடி, தமிழ்நாடு போலீஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 


சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்களில் ஆடவர் மற்றும் மகளிருக்கான 68வது மாநில கைப்பந்து போட்டி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. 

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற மகளிர் இறுதிப் போடடியில் முதன் முறையாக பங்கேற்ற ஐ.சி.எஃப் அணியும், சிவந்தி கிளப் அணியும் மோதின. இதில் முதல் இரண்டு செட்களில் ஐ.சி.எஃப் அணி 27-25, 25-17 என முன்னிலை வகித்தது. 3வது செட்டில் போராடி 27-25 என சிவந்தி கிளப் அணி வெற்றி பெற்றது. இருப்பினும், ஐ.சி.எஃப். அணியின் அபார ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாததால், நான்காவது செட்டில் சிவந்தி அணி 14-25 என ஐ.சி.எஃப் அணியிடம் தோல்வியை கண்டது. இறுதியில் 3-1 என்ற செட் கணக்கில் ஐ.சி.எஃப் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 

மற்ற அரையிறுதிப்போட்டிகளில், ஜிகேஎம் அணி 25-19, 15-25,25-12, 17-25,15-10 என பனிமலர் கல்லூரி அணியை வீழ்த்தியும், எஸ்.டி.ஏ.டி. அணி 25-9, 25-19, 25-8 என செயின்ட் ஜோசப் அணியை வீழ்த்தியும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதேபோல் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணியும் பி.கே.ஆர். ஈரோடு அணியும் மோதின. இதில் 17-25,16-25,25-19,29-27,15-11 என தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இன்று (டிச.20) நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் ஐ.சி.எஃப், ஜிகேஎம், எஸ்டிஏடி, தமிழ்நாடு போலீஸ் ஆகிய நான்கு அணிகள் மோதுகின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close