மாநில சீனியர் கைப்பந்து: இறுதிப்போடடியில் ஐ.சி.எஃப்...! 

  டேவிட்   | Last Modified : 20 Dec, 2018 07:23 pm
icf-women-entered-into-state-volleyball-championship-finals

சென்னையில் நடைபெற்று வரும் 68வது மாநில கைப்பந்து போட்டியின் மகளிர் பிரிவில், ஐ.சி.எஃப், அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவர் மற்றும் மகளிருக்கான 68வது மாநில கைப்பந்து போட்டி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. 

இன்று (டிச.20) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியின் மகளிர் பிரிவில் ஐ.சி.எஃப் - ஜிகேஎம். அணிகள் மோதின. இதில் ஐ.சி.எஃப் அணி 24-26, 26-24, 25-20, 22-25, 15-13 என ஜிகேஎம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.எஃப்.  அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் எஸ்டிஏடி - தமிழ்நாடு போலீஸ் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் ஐ.சி.எஃப். அணியுடன் மோதவுள்ளது. 

இந்தப் போட்டியைத் தொடர்ந்து ஆடவருக்கான அரையிறுதிப் போட்டியில் செயின்ட் ஜோசப் அணி, இந்தியன் வங்கியுடனும், ஐ.ஓ.பி. - எஸ்.ஆர்.எம். அணியுடனும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் இரு அணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close