மாநில சீனியர் கைப்பந்து போட்டி - மகளிருக்கான கோப்பையை வென்றது எஸ்.டி.ஏ.டி. அணி !

  டேவிட்   | Last Modified : 21 Dec, 2018 07:17 pm
state-volleyball-championship-finals

சென்னையில் நடைபெற்று வரும் 68வது மாநில கைப்பந்து போட்டியின் மகளிர் பிரிவில் எஸ்.டி.ஏ.டி அணி கோப்பையை கைப்பற்றியது.  

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவர் மற்றும் மகளிருக்கான 68வது மாநில கைப்பந்து போட்டி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற மகளிர் இறுதிப் போட்டியில் எஸ்.டி.ஏ.டி. அணியும் ஐ.சி.எஃப். அணியும் மோதின. இதில் முதல் செட்டை 25-20 என எஸ்.டி.ஏ.டி. அணி எடுத்தது. இரண்டாவது செட்டை ஐ.சி.எஃப். அணி 25-20 என எடுத்து சமநிலை அடைந்தன. பின்னர் சுதாரித்துக் கொண்ட எஸ்.டி.ஏ.டி. அணி அடுத்தடுத்து 25-15, 25-22 என புள்ளிகளை சேர்த்தது. இறுதியில் எஸ்.டி.ஏ.டி. அணி 25-20, 20-25, 25:-15, 25-22 (3-1) என ஐ.சி.எஃப. அணியை வீழ்த்தி 68வது மாநில கைப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாவது இடத்தை ஐ.சி.எஃப். பிடித்துள்ளது. 

முன்னதாக நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணியும், ஜிகேஎம் அணியும் மோதின. இதில் தமிழ்நாடு போலீஸ் அணி 25-23, 24-26, 25-18, 26:-24 என ஜிகேஎம் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. ஜிகேஎம் அணி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close