மாநில சீனியர் கைப்பந்து போட்டி:  ஐ.ஓ.பி., எஸ்.டி.ஏ.டி. அணிகள் கோப்பையை வென்றன !

  டேவிட்   | Last Modified : 21 Dec, 2018 10:02 pm
state-volleyball-iob-men-sdat-women-won-the-championship

சென்னையில் நடைபெற்ற 68வது மாநில கைப்பந்து போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும்,  மகளிர் பிரிவில் எஸ்.டி.ஏ.டி அணியும் கோப்பையை கைப்பற்றின.  

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவர் மற்றும் மகளிருக்கான 68வது மாநில கைப்பந்து போட்டி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியின் இறுதி ஆட்டங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. ஆடவர் பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும், இந்தியன் வங்கியும் மோதின. இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 19-25, 25-23, 25-18, 25-20 என இந்தியன் வங்கியை வீழ்த்தி போட்டியின் கோப்பையை வென்றது. இந்தியன் வங்கி இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியது. எஸ்.ஆர்.எம் அணி 3வது இடத்தையும், செயின்ட் ஜோசப் அணி 4வது இடத்தையும் பிடித்துள்ளன. 

மகளிர் இறுதிப் போட்டியில் எஸ்.டி.ஏ.டி. அணியும் ஐ.சி.எஃப். அணியும் மோதின. இதில் முதல் செட்டை 25-20 என எஸ்.டி.ஏ.டி. அணி எடுத்தது. இரண்டாவது செட்டை ஐ.சி.எஃப். அணி 25-20 என எடுத்து சமநிலை அடைந்தன. பின்னர் சுதாரித்துக் கொண்ட எஸ்.டி.ஏ.டி. அணி அடுத்தடுத்து 25-15, 25-22 என புள்ளிகளை சேர்த்தது. இறுதியில் எஸ்.டி.ஏ.டி. அணி 25-20, 20-25, 25:-15, 25-22 (3-1) என ஐ.சி.எஃப. அணியை வீழ்த்தி 68வது மாநில கைப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாவது இடத்தை ஐ.சி.எஃப். பிடித்துள்ளது. 


 
முன்னதாக நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணியும், ஜிகேஎம் அணியும் மோதின. இதில் தமிழ்நாடு போலீஸ் அணி 25-23, 24-26, 25-18, 26:-24 என ஜிகேஎம் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. ஜிகேஎம் அணி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வெற்றி பெற்ற அணிகளுக்கு கால்ஸ் நிறுவன இயக்குநர் நடேசன் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். இந்திய கைப்பந்து சம்மேளனத் தலைவர் எஸ்.வாசுதேவன், அர்ஜுனா மற்றும் துரோணாச்சாரியா விருது பெற்ற ஸ்ரீதரன், தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக அட்ஹாக் கமிட்டி சேர்மன் பாலசந்திரன், உறுப்பினர் செயலர் பிரபாகரன், சர்வதேச கைப்பந்து வீரர் நடராஜன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close