குத்துச்சண்டை: தமிழக பெண்கள் ஒட்டு மொத்த சாம்பியன் !

  டேவிட்   | Last Modified : 22 Dec, 2018 01:26 pm
boxing-tamilnadu-women-won-overall-championship

கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் நடைபெற்ற தென்மண்டலங்களுக்கு இடையிலான பெண்கள் குத்துச்சண்டை போட்டியில், தமிழக பெண்கள் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 

தென் மண்டலங்களுக்கிடையான  ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபெற்ற சீனியர் பிரிவுக்கான  குத்துச்சண்டை சாம்பியன் போட்டி- 2018 மற்றும் 9வது சப்-ஜூனியர் பெண்கள் பங்குபெற்ற அகில இந்திய குத்துச்சண்டைசாம்பியன்ஷிப் போட்டி-2018, ஆகியவை, கடந்த 16-ம் தேதியிலிருந்து 20-ம் தேதி வரை, பெங்களுருவில் உள்ள கண்டீரவா உள்விளையாட்டரங்கத்தில்  நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்   கலந்துக்கொண்டனர். இப்போட்டியில் தமிழக சீனியர் பெண்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். ஜீ .ரசிகா சயின்டிபிக்  குத்துச்சண்டைவீராங்கனை இந்த விருதினை பெற்றார். ஆர்.ரசிதாபர்வீன் பெஸ்ட் லூசெர் விருதினை  பெற்றார். 

ஆண்கள் சீனியர் பிரிவில் எம்.லட்சுமணமூர்த்தி லைட் பிளை வெயிட் பிரிவில் தங்கப்பதக்கமும், சிறந்த குத்துச்சண்டைவீரர் விருதினையும் பெற்றார். எம்.தீபக் லைட் வெயிட் பிரிவில் தங்கப்பதக்கமும், சிவா மிடில்  வெயிட் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், எஸ்.விவேக் குமார் லைட் வெல்டர் வெயிட் மற்றும் பி.தினுக்தாரிக் வெல்டர் வெயிட்,கே.ஜனார்த்தனன் மிடில் வெயிட் ஆகிய பிரிவுகளில் வெண்கல  பதக்கங்களை  வென்றனர்.

சப்-ஜூனியர் பெண்கள் பிரிவில் பி.ஸ்ரீநிதி வெள்ளி மற்றும் பெஸ்ட் லூசெர் விருதினை பெற்றார். ரங்கநாயகி வெள்ளி பதக்கமும், எஸ்.ஹரிபிரீத்தி ,லக்  ஷிதா, ப்ரீத்தி, ராஜேஸ்வரி மற்றும் ஷீபா  ஹெட்சியால்  ஆகியோர் வெண்கல பதக்கங்களையும் வென்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close