புரோ கபடி லீக்: மும்பையை வீழ்த்தி உ.பி அணி த்ரில் வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 09:27 am
pro-kabaddi-league

கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற புரோ கபடி லீக் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி உ.பி அணி த்ரில் வெற்றி பெற்றது 

புரோ கபடி லீக் போட்டிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற 124வது லீக் ஆட்டத்தில் உ.பி. யோதா அணி, யு மும்பா அணியுடன் மோதியது. விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதி நேரத்தில் இரு அணிகளும் 32-32 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தது. கடைசி நிமிடத்தில் உ.பி யோதா வீரர் பிரசாந்த் குமார் ராய் 2 புள்ளிகள் பெற்று அணியை வெற்றி பெறச்செய்தார். இறுதியில் 34- 32 என்ற புள்ளி கணக்கில் உ.பி யோதா அணி த்ரில் வெற்றியடைந்து 7வது வெற்றியை பெற்றது. 

மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி, நடப்பு சாம்பியனான பாட்னா பைரட்சுடன் மோதியது. 39-23 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை வீழ்த்தி பெங்கால் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 10வது வெற்றியை பதிவு செய்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close