மாநில இறகு பந்து போட்டி: சென்னை முதலிடம்

  Newstm Desk   | Last Modified : 31 Dec, 2018 11:09 am
state-level-wing-ball-competition-chennai-first-prize

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் சென்னை அணியைச் சேர்ந்த பாலாஜி, சந்தோஷ் ஆகியோர் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தனர். 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி  நடைபெற்றது. இதில், சேலம், கோவை, திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து (120 அணி) 240 பேர் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை அணியை சேர்ந்த பாலாஜி, சந்தோஷ் ஆகியோர் முதல் இடத்தையும், பெங்களூருவை சேர்ந்த யுவராஜ், செல்வகுமார் ஆகியோர் இரண்டாம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த கிருத்திக், பாலாஜி மூன்றாம் இடத்தையும், எடப்பாடியை சேர்ந்த யுவராஜ், செல்வகுமார் ஆகியோர் நான்காம் இடத்தை கைப்பற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு போட்டி நிர்வாகிகள் செங்கோட்டுவேல், தணிகாசலம், பாவரசன் ஆகியோர் பரிசு தொகை, சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close