2 நிமிடங்களில் ரூ.63 கோடியா?

  டேவிட்   | Last Modified : 01 Jan, 2019 10:57 pm
63-crores-in-2-miniutes

அமெரிக்கா குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர், புத்தாண்டையொட்டி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று ரூ.62,70,75,000-ஐ பரிசாக வென்றுள்ளார். 

ஜப்பானில், புத்தாண்டையொட்டி நடைபெற்ற கண்காட்சி குத்துச்சண்டை போட்டியில், அமெரிக்காவின் ஓய்வு பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர்  பிளாய்ட் மேவெதர்,  ஜப்பானை சேர்ந்த கிக்-பாக்சிங் வீரரான நாசுகாவா  ஆகியோர் மோதினர். கண்காட்சி போட்டியாக ஜப்பானின் ரிஜின் நிறுவனம் இதனை நடத்தியது.

9 நிமிடங்களை கொண்ட இந்த போட்டி, ஒவ்வொரு சுற்றுக்கும் 3 நிமிடங்கள் என்கிற அடிப்படையில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டமது. ஆனால் தொடங்கிய 139 வினாடிகளிலேயே பிளாய்ட் மேவெதர்  நாசுகாவாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் 9 மில்லியன் டாலர்களை ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.62,70,75,000)  பரிசாக வழங்கப்பட்டது.  தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் இதுவரை தோல்வியே காணாத பிளாய்ட் மேவெதர், 50 போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close