மாநில அளவிலான ஃபிஸ்ட்பால் போட்டி: 17 மாவட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 05:02 pm
state-level-fist-ball-match

சேலத்தில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஃபிஸ்ட்பால் போட்டியில் 17 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

சேலம் மாவட்டம் 4 ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு ஃபிஸ்ட்பால் அசோசியேசன் மற்றும் சேலம் மாவட்ட ஃபிஸ்ட்பால் அசோசியேசன் சார்பில், 2 ஆவது சீனியர் மாநில அளவிலான ஃபிஸ்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியை இன்று ஃபிஸ்ட்பால் பெடரேஷன் ஆப் இந்தியாவின் பொதுச்செயலாளர் பால விநாயகம், சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ரவிச்சந்திரன், தமிழ்நாடு ஃபிஸ்ட்பால் அசோசியேசன் கெவின் ஆனந்தராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

இந்தப் போட்டியில் சென்னை, சேலம், நாமக்கல், வேலூர், கோவை, மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த 17 ஆண்கள் அணிகளும், 16 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு நாளை மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் கலந்துகொண்டு வெற்றி கோப்பைகளும், சான்றிதழ்களையும் வழங்கவுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close