ப்ரோ கபடி லீக்: சாம்பியன் பட்டத்தை வென்றது பெங்களூரு!

  shriram   | Last Modified : 05 Jan, 2019 11:11 pm
pkl-bengaluru-bulls-win-maiden-championship

2018ம் ஆண்டிற்கான ப்ரோ கபடி லீக் தொடரின் இறுதி போட்டியில், பவன் ஷெராவத்தின் அதிரடி ஆட்டத்தால், குஜராத் பார்ச்சூன்ஜயண்ட்ஸ் அணியை, பெங்களூரு புல்ஸ் 38-33 என வீழ்த்தி, தனது முதல் கோப்பையை கைப்பற்றியது. 

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பெங்களூரு, குஜராத் அணிகள் விளையாடும் ப்ரோ கபடி லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இரு அணிகளுமே கோப்பையை வெல்ல கடுமையாக போராடியதால், முதல் பாதி விறுவிறுப்பாக சென்றது. இரு அணிகளுமே மாறி மாறி புள்ளிகளை எடுத்து சமமாகவே இருந்து வந்தன. முதல் பாதி முடியும் கடைசி நேரத்தில் குஜராத் மிகச் சிறப்பாக விளையாடி புள்ளிகளை குவித்தது. 16-9 என்ற முன்னிலை பெற்று முதல் பாதியை குஜராத் முடித்தது. 

அதன்பிறகு பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி குஜராத்தை நெருங்கத் தொடங்கியது. ரைடர் பவன் ஷெராவத் அட்டகாசமாக விளையாடி குஜராத்தை தனி ஆளாக அவுட் செய்தார். விடாமுயற்சி செய்து குஜராத் 29-29 என போட்டியை மீண்டும் சமன் செய்தது.
 ஆனால் கடைசி நேரத்தில் பவன் மீண்டும் இரண்டு புள்ளிகளை எடுத்து குஜராத்தை ஆல் அவுட் செய்து 38-33 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு வெல்ல உதவினார். சாம்பியன் பட்டத்தை பெங்களூர் அணி கைப்பற்ற, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் தோற்று ஏமாற்றத்துடன் குஜராத் திரும்பியது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close