சர்வதேச செஸ் பெடரேஷனின் ஆசிய 'அசிஸ்டன்ட்' விஸ்வநாதன் ஆனந்த்

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 06:11 am
viswanathan-anand-appointed-as-continental-chief-of-asia

சர்வதேச செஸ் பெடரேஷன் (FIDE) தலைவர் அர்கெடி ட்வோர்கோவிச் ஒவ்வொரு கண்டத்திற்கும் புதிய உதவியாளர்களை நியமித்துள்ளார். அதில் ஆசிய கண்டத்தின் உதவியாளராக, இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஒவ்வொரு கண்டத்திலும் செஸ் போட்டியை வளர்க்க உதவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் அதன் தலைவர் ட்வோர்கோவிச், ஒவ்வொரு கண்டத்தின் பிரதிநிதியாக, உதவியாளர்களை நியமிப்பார். தற்போது, ஆசிய கண்டத்தின் தலைவராக இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தை FIDE அறிவித்துள்ளது.

ஐரோப்பிய உதவியாளராக, முன்னாள் உலக சாம்பியன் விளாடிமிர் கிரம்னிக் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க கண்டங்களின் உதவியாளராக, வெனிசுவேலா செஸ் கூட்டமைப்பின் தலைவர் பிடெல் கொன்சாலஸும், ஆப்பிரிக்க கண்டத்தின் உதவியாளராக, ஆப்பிரிக்க  செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவர் லுபாங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். "தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதவியாளர்களின் அனுபவமும், அவர்களது தொழில் சார்ந்த அறிவும், உலகம் முழுக்க செஸ் விளையாட்டை வளர்க்க உதவி செய்யும்" என FIDE தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close