தேசிய கைப்பந்து போட்டி: பஞ்சாப், ஹரியாணா காலிறுதிக்கு முன்னேற்றம்...!

  டேவிட்   | Last Modified : 06 Jan, 2019 08:49 pm
senior-national-volleyball-championship-at-chennai

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில், தமிழக ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், பஞ்சாப் ஆடவர் மற்றும் ஹரியாணா மகளிர் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

இந்திய கைப்பந்து சம்மேளனம் நடத்தும் 67வது தேசிய சீனியர் கைப்பந்து போட்டி, சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் கடந்த 2ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று (டிச.6) காலிறுதிக்கு தகுதி பெறும் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆடவர் பிரிவில் பஞ்சாப்-உத்ரகாண்ட் அணிகள் மோதின. முதல் செட்டில் பஞ்சாப் அணி 20-25 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவியது. பின்னர் சுதாரித்துக் கொண்ட பஞ்சாப் அணியினர் 25-16, 25-16, 25-21என்ற புள்ளிக்கணக்கில் உத்ரகாண்ட் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

இதேபோல், மகளிர் அணியில் ஹரியாணா அணி 25-17, 25-14, 25-14 என்ற புள்ளிக்கணக்கில் உத்தரப்பிரதேச அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது. 

தமிழக ஆடவர் மற்றும் மகளிர் இரு அணிகளும் ஏற்கனவே காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close