சென்னை ஸ்பார்டன்ஸ் அணியில் சொரோகின்ஸ்...

  டேவிட்   | Last Modified : 08 Jan, 2019 02:38 pm

sorokins-for-chennai-spartans-in-inaugural-pro-volleyball-league

ப்ரோ வாலிபால் லீக் அறிமுகத் தொடரில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியில்  லாட்வியா நாட்டின் ருஸ்லான்ஸ் சொரோகின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். 

ப்ரோ வாலிபால் லீக் தொடர் கொச்சி மற்றும் சென்னையில் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் லாட்விய நாட்டவரான ருஸ்லான்ஸ் சொரோகின்ஸ் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் 2வது வெளிநாட்டு வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். 

கால்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை ஸ்பார்டன்ஸ்  அணியில் ஏற்கனவே கனடாவின் ரூடி வெராஃப் (பிளாக்கர்) மற்றொரு வெளிநாட்டு வீரராக இடம் பெற்றுள்ளார். இந்திய நட்சத்திர வீரர்கள் பிரிவில் ஜி.எஸ்.அகின் (பிளாக்கர்) இந்த அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற ஏலத்தில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இத்தொடரில் பங்கேற்கும் 6 அணிகளும் தலா ஒரு வெளிநாட்டு வீரரை தேர்வு செய்து 12 பேர் கொண்ட முழுமையான அணியை உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 36 வயதான சொரோக்கின்ஸ் சர்வதேச போட்டிகளில் அனுபவம் பெற்றவர். லாட்வியாவுக்காக ஆடியதுடன் கஜகஸ்தான், ஸ்லோவாலக்கியா, ஃப்ரான்ஸ் ஆகிய நாட்டு கிளப் அணிகளுக்காகவும் ஆடியவர். 196 சென்டிமீட்டர் உயரம் கொண்ட இவர் 2012 கோடைகால ஒலிம்பிக்கில் பீச் வாலிபாலில் இவர் பங்கேற்றுள்ளார். பரந்த அனுபவம் மிக்க ருஸ்லானின் வருகை எங்கள் அணியை மேலும் வலுவாக்கும் எனவும், ஸ்பார்டன்ஸ் அணிக்கு புதிய பரிமாணத்தை தந்துள்ளார் ருஸ்லான் எனவும், சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் பிரிவு தலைவர் டாக்டர்  உப்பிலியப்பன் கோபாலன் குறிப்பிட்டுள்ளார். 

இத்தொடரில் காலிகட் ஹீரோஸ், அகமதாபாத் டிஃபெண்டர்ஸ், பிளாக் ஹாக்ஸ் ஹைதராபாத், கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ், யூ மும்பா வாலி அணிகளும் பங்கேற்கின்றன. 

சென்னை ஸ்பார்டன்ஸ் அணி வீரர்களின் விவரம்: 

அட்டாக்கர்: விபின் ஜார்ஜ், பிறைசூடன், ருஸ்லான் சொரோக்கின்ஸ்
யுனிவர்சல்: அஷ்வின்
பிளாக்கர்: ரூடி வெராஃப், ஜிஎஸ் அகின், ஏ.பாக்யராஜ், ஷெல்டன் மோசஸ்
செட்டர்: கே.ஜே.கபில்தேவ், வி.ஹரிஹரன்
லிபரோ: பி.பிரபாகரன், 

தலைமை பயிற்சியாளராக எம்.எச்.குமராவும், உதவி பயிற்சியாளராக ரமேஷ் மெந்திகிரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், அணி மேலாளராக சர்வதேச கைப்பந்து வீரர் நடராஜன் ஜெயக்குமாரும், அணி பகுப்பாய்வாளராக சபரி ராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.