தேசிய அளவிலான சைக்கிள் போலோ: நெல்லையை சேர்ந்த 10 பேர் பங்கேற்பு

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 03:53 pm
national-level-cycle-polo-10-participants-in-nellai

தேசிய அளவிலான சைக்கிள் போலோ சாம்பியன் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நெல்லை வீரர்கள் 10 பேரும் இன்று நாக்பூர் புறப்பட்டனர். 

ராஜஸ்தான் அரசர்களிடையே விளையாடபட்டு வந்த சைக்கிள் போலோ, கடந்த 30 ஆண்டுகளாக மீண்டும் விளையாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த விளையாட்டு கடந்த 10 ஆண்டுகளாக விளையாடப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டில் சைக்கிள் ஓட்டிகொண்டே பந்தை அடிக்க வேண்டும். இதற்கு கடின உடற்பலமும், நூண்ணறிவும் வேண்டும்.

இந்த சைக்கிள் போலோ விளையாட்டின் தேசிய அளவிலான சாம்பியன் சிப் போட்டிகள்  நாக்பூரில்  வரும் 10ம் தேதி  முதல் 13 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில்  30 மாநிலங்களில் இருந்து 60 அணிகள் பங்கேற்கவுள்ளதாகவும், மாநிலத்திற்கு 24 வீரர்களே தேர்வு செய்யப்படும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 10 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட சைக்கிள் போலோ சங்க செயலாளர் பெரியதுரை தெரிவித்துள்ளார். 

இந்த போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வர். இந்நிலையில், தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளவுள்ள 10 வீரர்களும் இன்று பெற்றோர்கள் ஆசி பெற்று, ரயில் மூலம் நாக்பூர் புறப்பட்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close