தேசிய கைப்பந்து போட்டி: அரையிறுதியில் தமிழகம்-கேரளா இன்று மோதல்..!

  டேவிட்   | Last Modified : 08 Jan, 2019 11:49 pm

national-volleyball-championship-at-chennai-tn-ker-in-semi-finals

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில் இன்று (டிச.9) நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் தமிழக ஆடவர் அணி, கேரளாவை எதிர்கொள்கிறது. 

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்களில் கடந்த 2ஆம் தேதி 67வது தேசிய சீனியர் கைப்பந்து போட்டி தொடங்கியது. நேற்று (டிச.8) நடைபெற்ற ஆடவர் காலிறுதிப் போட்டியில் கர்நாடகாவும், ஹரியாணாவும் மோதின. இதில் கர்நாடகா அணி 23-25, 25-18, 25-21, 25-20 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ரயில்வே, பஞ்சாப் அணியுடன் மோதியது. இதில்  பஞ்சாப் அணி 25-27,25-18,25-23,17-25,15-12 என ரயில்வே அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

மகளிர் பிரிவில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், மேற்கு வங்க அணி 25-20, 25-17, 25-23 என கர்நாடகாவை எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மற்றொரு காலிறுதி போட்டியில் தமிழக அணியும், மகாராஷ்டிரா அணியும் மோதின. இதில் 21-25, 25-15, 27-25, 25-20 என்ற புள்ளிக் கணக்கில் தமிழக அணியை வீழத்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

இன்று (டிச.9) நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் ஆடவர் பிரிவில் தமிழக அணி, கேரளா அணியுடனும், கர்நாடகா அணி, பஞ்சாப் அணியுடனும் மோதுகின்றன. மகளிர் பிரிவில் ரயில்வே-மகாராஷ்டிரா, கேரளா-மேற்கு வங்க அணிகள் மோதுகின்றன. வெற்றி பெறும் இரு அணிகள் நாளை (டிச.10) நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.