தேசிய கைப்பந்து: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா...!

  டேவிட்   | Last Modified : 09 Jan, 2019 05:00 pm

national-volleyball-karnataka-enters-into-finals

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில், ஆடவர் பிரிவில் கர்நாடகாவும், மகளிர் பிரிவில் ரயில்வேயும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. 

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த 2ஆம தேதி, ஆடவர் மற்றும் மகளிருக்கான தேசிய சீனியர் கைப்பந்து போட்டி தொடங்கியது. இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆடவர் பிரிவில், கர்நாடகா அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இதில் கர்நாடகா அணி 25-13, 25-22, 25-20 என்ற புள்ளிக்கணக்கில் பஞ்சாப் அணியை எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மற்றொரு அரையிறுதிப்போட்டியில் தமிழக அணியும், கேரள அணியும் மோதுகின்றன. இதில் தமிழக அணி வெற்றி பெற்றால் கர்நாடகா அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும். 

மகளிர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ரயில்வே அணி மகாராஷ்டிரா அணியை 25-19, 25-18, 25-19 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் கேராளாவும், மேற்கு வங்கமும் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ரயில்வேயுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்யும். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.