தேசிய கைப்பந்து: கோப்பையை கைப்பற்றுமா தமிழகம்...? கர்நாடகவுடன் இன்று பலப்பரீட்சை !

  டேவிட்   | Last Modified : 09 Jan, 2019 11:50 pm
senior-national-volleyball-tamilnadu-karnataka-in-finals

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில், ஆடவர் பிரிவில் தமிழக அணி, கேரளாவை வீழத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இன்று (டிச.10) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் தமிழக அணி, கர்நாடக அணியை எதிர்கொள்கிறது. 

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த 2ஆம தேதி, ஆடவர் மற்றும் மகளிருக்கான தேசிய சீனியர் கைப்பந்து போட்டி தொடங்கியது. நேற்று (டிச.9) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழ்நாடு-கேரளா மோதின. இதில் தமிழ்நாடு  25-27,25-14,25-18,25-16 என்ற புள்ளிக்கணக்கில் கேரளாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.  முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில், கர்நாடகா அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இதில் கர்நாடகா அணி 25-13, 25-22, 25-20 என்ற புள்ளிக்கணக்கில் பஞ்சாப் அணியை எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

மகளிர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ரயில்வே அணி மகாராஷ்டிரா அணியை 25-19, 25-18, 25-19 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் கேராளாவும், மேற்கு வங்கமும் மோதின. இதில் கேரளா 25-18,25-9,25-9 என்ற புள்ளிக் கணக்கில் மேற்கு வங்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இன்று (டிச.10) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், ஆடவர் பிரிவில் தமிழ்நாடு-கேரளா அணிகளும், மகளிர் பிரிவில் ரயில்வே-கேரளா அணிகளும் மோதுகின்றன. வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் பஞ்சாப் அணி, கேரள அணியுடனும், மகளிர் பிரிவில் மகாராஷ்டிரா-மேற்கு வங்க அணிகளும் மோதுகின்றன. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close