தேசிய சீனியர் கைப்பந்து: கர்நாடகா, கேரளா அணிகள் சாம்பியன்ஸ்..!

  டேவிட்   | Last Modified : 10 Jan, 2019 10:43 pm
senior-national-volleyball-championship-at-chennai

சென்னையில் நடைபெற்ற தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில், ஆடவர் பிரிவில் கர்நாடக அணியும், மகளிர் பிரிவில் கேரள அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன.  

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் ஆடவர் மற்றும் மகளிருக்கான 67வது தேசிய சீனியர் கைப்பந்து போட்டி கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. நேற்று  (டிச.10) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆடவர் பிரிவில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. இதில் கர்நாடக அணி 21-25, 36-34, 25-18, 25-14 என்ற புள்ளிக் கணக்கில் தமிழக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழ்நாடு வெள்ளிப் பதக்கத்தை வென்றது. 

மகளிர் இறுதிப் போட்டியில் ரயில்வே அணியும், கேரளா அணியும் மோதின. இதில் இரு அணிகளும் தலா இரண்டு செட்கள் எடுத்தன. வெற்றியை தீர்மானிக்கும் 5வது செட்டை கேரளா 15க்கு 8 என்ற புள்ளிக்கணக்கில் எடுத்தது. இதன் மூலம் 20-25, 25-17, 17-25, 25-19, 15-8 என கேரள அணி ரயில்வே அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 

முன்னதாக நடைபெற்ற வெண்கலப்பதக்கதிற்கான ஆட்டங்களில், ஆடவர் பிரிவில் கேரளா அணி 25-23 ,25-16 , 25-19 என்ற புள்ளிக் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் கேரளா அணி வெண்கலப் பதக்கத்துடன் மூன்றாவது இடத்தையும், பஞ்சாப் அணி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.  மகளிர் பிரிவில் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்தையும், மேற்கு வங்கம் நான்காவது இடத்தையும் கைப்பற்றியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close