தரவரிசை பட்டியலில் மேரி கோம் முதலிடம்!

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 08:48 pm
mary-kom-top-aiba-rafale

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், தொடர்ந்து சிறப்பாக விளையாடி பல்வேறு வெற்றிகளை குவித்து வரும் நிலையில், சர்வதேச குத்துச்சண்டை தரவரிசை பட்டியலில் 48 கிலோ எடைப்பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச சாம்பியன்ஷிப் குத்துசண்டை தொடரில் இந்திய வீராங்கனை மேரி கோம் 48 கிலோ எடை பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். ஆறாவது முறையாக மேரி கோம் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற மேரி கோம் தயாராகி வருகிறார். 48 கிலோ எடைப்பிரிவு ஒலிம்பிக்ஸில் இல்லாததால், 2020 ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு முன், அவர் 51 கிலோ எடைப்பிரிவுக்கு தகுதி பெற வேண்டும்.

இந்நிலையில், தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் மேரி கோமுக்கு 48 கிலோ எடைப்பிரிவில் சர்வதேச பட்டியலில் முதலிடம் கிடைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் வீராங்கனையை விட 600 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளார் மேரி கோம். இந்திய வீராங்கனை பிங்கி ஜங்க்ரா 51 கிலோ எடைப்பிரிவில் 8வது இடத்தையும், 54 கிலோ எடைப்பிரிவில் மனிஷா மவுன் 8வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்ற சிம்ரன்ஜீத் கவுர் 64 கிலோ எடைப்பிரிவில் 4வது இடத்தையும், 57 கிலோ எடைப்பிரிவில் முன்னாள் வெள்ளி வீராங்கனை சோனியா லாதர் 2வது இடத்தையும், 69 கிலோ எடைப்பிரிவில் வெண்கல வீராங்கனை லொவினா பொர்கோஹைன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close